பெண்களைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரே ஒரு அட்வைஸ்தான் சொல்லுவன்,பொம்பிள்ளை அதிகமாகப் படிச்சா நல்ல மாப்பிள்ளை கிடைக்காது, பெண் ஏன் அதிகமா படிக்கனும் என்று உங்கள் பெண் பிள்ளைகள் வீட்டோடு இருக்கும்படி மட்டும் வளர்க்காதீர்கள்.
அது எதிர்காலத்தில் உங்கள் பிள்ளை யாரோ ஒருத்தனுக்கு அடிமையாக வீட்டில் சேவகம் செய்பவளாக இருக்கவே வழிகோலும்.வருங்கால மாப்பிள்ளை வந்து உங்கள் மகளைப் பார்த்து , ” நீ பொம்பிள்ளை உனக்கு மூளை இல்லை , திறமை இல்லை, நீ கையாள் ஆகாதவள்” என்று திட்டும்போது , வேறு வழியில்லாமல் அவன் போடும் சோத்துக்காக அவனை சகித்துக் கொண்டு வாழாமல் அவனை துரத்தித் துரத்தி அடிச்சு விரட்ட துணிச்சல் வருமளவுக்கு அவள் வளர வழி விடுங்கள்.
கவனிக்க : இங்கே நீங்கள் அவளை வளர்க்கத் தேவையில்லை. அவள் பெண் என்று கட்டுப்படுத்தாமல் அவளை தானாக வளர விட்டாலே அவள் சுயமாக தன்னைப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு வளர்ந்து விடுவாள்.
இந்த அட்வைஸ் நிறை ஆண்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். இருந்தாலும் நீங்கள் ஒரு சமூகமாக முன்னேற வேண்டும், உங்கள் பிள்ளைகள் நல்ல சமூகத்தில் வாழவேண்டும் என்பதற்காக இந்த கசப்பான உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இல்லாட்டி நீங்கள் ஐம்புலனையும் அடக்கிட்டு கல்யாணம் கட்டாமல் இருப்பதே உத்தமம்.

