எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- 22.தென்னாடும் தென் கிழக்கும் இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து…. ஜகார்தா அருங்காட்சியகத்தில் அடுத்து நம் கருத்தைக் கவர்ந்தது ஒரு அரிய சிலை.  அமோக பாசர் (Amoghapasa) என்னும் அவலோகிதர்(Avalokiteshvara) சிலை. ஏதோ சாவக பூமியின் பழைய சிலை என்ற எண்ணத்தோடு இலேசாக எட்டிப்பார்த்த எனக்கு அந்தக் கற்சிலை 13 ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூக ,பொருளாதார, ஆன்மிக குறிப்புகளை கொட்டிக் கொடுக்கும் என்ற எண்ணம் சிறிதளவும் அப்போது தோன்றவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால், தமிழகத்தின் சோழ நாடு, பாண்டிய நாடு, இலங்கை, கிழக்கு சாவகம் (EAST JAVA), சுவர்ணபூமி (SUMATRA), மலாய் (MELAYU) என்று இத்தனை மண்ணின் நிகழ்வுகளையும் தன்னுள் அமைதியாக அடை காத்து கல்லாய்ச் சமைந்து இருந்தது. கொஞ்சம் ஆய்வு மேற்கொண்ட போது சீன தேசத்தின் குப்ளாய் காண் (KUBLAI KHAN, FORMER EMPEROR OF THE YUAN DYNASTY) இடையில் வந்து நிற்கின்றார். இதே கால கட்டத்தில் குப்ளாய் காண் அரண்மனையில் இருந்து நேராக சுவர்ண தீவு /சுவர்ண பூமி/ சுமத்ரா வந்து சேர்ந்த வெனிஸ் வணிகர் மார்கோ போலோ (MARCO POLO ) அடுத்து பயணம் செய்ய இலங்கை கிளம்புவதற்கு கடற் காற்று சாதகமாக இல்லை என்பதால் 6 மாதம் சுமத்ராவிலேயே தங்கி இருக்கிறார். இலங்கைக்கு அடுத்து அவரது அடுத்த பயணம் முதலாம் மாற வர்மன் குலசேகர பாண்டியனின் பாண்டிய நாடு. இப்படி தென்னகத்தை இணைக்கிகின்ற நினைக்கின்ற கால கட்டத்துக்குத்தான் இந்த கற்சிலை சொற்சிலம்பம் ஆடப்போகிறது. கப்பலேறிப் போவோமோ …. அலை கடல் நடுவே பல கலம் செலுத்திய ஆதித் தமிழரின் ஆன்ம லயத்துடன் என்னோடு பயணம் வர ஆயத்தம் ஆகுங்கள். பமலாயு பயணம் /(PAMALAU EXPEDITION) ஆகஸ்ட் மாதம் 22 ஆம் நாள், 1286 ஆம் ஆண்டு… கிழக்கு சாவகத்தின் சிங்கோசாரி இராச்சிய மன்னர்  அபிஷேக ஸ்ரீ மஹா ராஜாதி ராஜா கர்த்த நகார விக்கிரம தர்மோதுங்க தேவர் (Aabhiseka Sri Maharajadiraja Kertanagara Wikrama Dharmmottunggadewa) சுவர்ணபூமியின் தலைநகரான தர்மாஸ் ராயா (Dharmasraya) வின் அரசர் ஸ்ரீ மஹா ராஜா ஸ்ரீமத் திரிபுவன ராஜ மௌலி வர்மா தேவர் (Sri Maharaja Srimat Tribhuwanaraja Mauliwarmadewa ) அவர்களுக்கு தமது முக்கிய அரச தந்திரியான அத்வயபிரம்மாவின் தலைமையில் மஹிசா அனாபிராங் (Mahisa Anabrang/Kebo Anabrang) எனும் தூதர் மூலம் போதிசத்வ அமோகபாஷ லோகேஸ்வரரின் சிலையைப் பரிசாக அனுப்பி இருந்தார்.Read More →