உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகள் போல பாராட்டும், ஒரு அடையாளத்திற்காக ஏங்குவதும் மனிதனின் ஒரு முக்கியமான அடிப்படைத் தேவை தான்.

ஒரு சமூகத்தில் சாதனை படைக்கும் இளையவர்கள், திறமையானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு, ஏற்கனவே சாதனை படைத்தவர்களால் பாராட்டப்படும் போது, அது இளையவர்களை உற்சாகப்படுத்தி, இன்னும் பல வெற்றிகளை குவிக்க வைத்து, இதனால் அந்த சமூகமே முன்னேற்றம் அடைகிறது.

ஆனால் எல்லோருக்கும் பாராட்டும் மனது வாய்த்து விடுவதில்லை.

*என் லெவலுக்கு இறங்கி பாராட்டணுமா?

*எனக்கு இருக்கிற பிஸிக்குள்ள இது கட்டாயம் தேவையா?

*நான் வெல்லும் போது இவர்கள் எல்லாம் பாராட்டினாங்களா?

இப்படியான மனநிலை இந்த சமூக ஊடகங்களுக்கான யுகத்தில் அதிகமாகவே இருக்கின்றது. தங்களது ஃபாலோவர்ஸ், தங்களது படைப்புகளுக்கான அங்கீகாரம் என்று ஓடிக்கொண்டிருக்கும்போது பிறரை பாராட்டுவதற்கு மனமும் நேரமும் வாய்ப்பதில்லை.

ஆனால் butterfly effect போல உங்களது உண்மையான ஒரு சிறு பாராட்டு, இன்னொருவரது பெரிய இலட்சியத்துக்கு திறவுகோலாக அமைந்துவிட வாய்ப்புகள் உண்டு.

இன்னொரு விடயம் நண்பர்களே, பாராட்டுவதும் நன்றி உணர்ச்சியும் சகோதரர்கள் போல. நன்றி உணர்ச்சி உள்ளவர்களிடம் பாராட்டும் பழக்கமும் தானாகவே வந்துவிடும்.

ரஜினி அவர்கள் அமரர் பாலச்சந்தர் அவர்கள் தொலைபேசியில் பேசினால் கூட எழுந்து நின்று தான் பேசுவாராம். தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் பழைய தயாரிப்பாளர்களை எல்லாம் மீண்டும் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர் சூப்பர் ஸ்டார்.

பிரதீப்பின் அந்த சிரிப்பை பாருங்கள். இன்னும் உத்வேகத்துடன் பல படங்களை உருவாக்கும் வலிமையை அது நிச்சயம் தந்திருக்கும்.